ஏவிஎம் சரவணன் ( 86 வயது ) இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் அழியாத தடத்தை பதித்த தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையானது ஏ.வி.எம் நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் பல தலைமுறைகளாக தமிழ் சினிமாவின் வளர்ச்சி, மாற்றம், புதுமை ஆகியவற்றிற்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளது. அவருக்கு பிறகு நிறுவனத்தை மேம்படுத்தி புதிய உச்சிக்கு கொண்டு சென்றவர் அவரது மகன் ஏ.வி.எம் சரவணன்.2014ஆம் ஆண்டை தொடர்ந்து ஏ.வி.எம் நிறுவனம் திரைப்பட தயாரிப்பில் இருந்து ஓரளவு விலகிஇருந்தாலும்,சினிமாவரலாற்றில்அவர்களின்பங்களிப்புஎன்றும்அழியாததாகவே தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த 86 வயதான ஏ.வி.எம் சரவணன்இன்று(டிசம்பர்4)அதிகாலையில்காலமானார்.அவரதுஉடல்ஏ.வி.எம்ஸ்டூடியோவில் உள்ளமூன்றாவதுதளத்தில்பொதுமக்கள்அஞ்சலிக்குவைக்கப்பட்டுள்ளது. இந்த துயரச் செய்தி வெளியாகியதும், அரசியல், சினிமா, கலையுலகத்திலிருந்து பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் மு. க. ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்கள் நேரடியாக சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்ஏ.வி.எம் சரவணனின் மனிதநேயத்தையும், ஒழுக்கத்தையும் நினைவு கூறிய பார்த்திபன்,”ஏ.வி.எம் என்ற மூன்று எழுத்துகள் போலத்தான் அவர் வாழ்ந்த விதமும்-பணிவு, பண்பு, ஒழுக்கம். அவர் மிக எளிமையானவர் என்றாலும், உள்ளிருந்து வரும் மரியாதை ஒன்றை அனைவரிடமும் பெற்றவர். ‘இறுதி மரியாதை’ என்பதற்கே அவர் தகுதியில்லாதவர்; அவர் எப்போதும் மரியாதைக்குரியவரே,” என உணர்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.மேலும்,”சரவணன் சாரின் படத்தை அஞ்சலியாக வைத்து, குறைந்தது 100 படங்களையாவது ஏ.வி.எம் நிறுவனத்தார் மீண்டும் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,” எனவும் தெரிவித்தார். ஏ.வி.எம் ஸ்டூடியோ தன்னுடைய கற்றல் தளமாக இருந்ததாக நினைவு கூறிய நடிகர் விஷால், “இந்திய திரைப்படத் துறையே ஒரு பெரும் ஆளுமையை இழந்துள்ளது. தயாரிப்பாளர்களின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் அவர் ஒரு பள்ளி. அவரின் நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும்,” என தனது பதிவில் சோகத்தோடு கூறியுள்ளார்.ஏவிஎம் சரவணன் இறந்த செய்தியை கேட்டதும் நடிகர் சிவகுமார் தன்னுடையமகன்சூர்யாவோடுநேரில்சென்றுஅஞ்சலி
செலுத்தி இருந்தார். அப்போது சரவணன் உடலை பார்த்ததும் சிவக்குமார் கண்கலஙகி இருந்தார். பக்கத்தில்இருந்தநடிகர்சூர்யாஆறுதல்சொல்லிசோகத்தின்உருவமாகவே நின்று கொண்டிருந்தார்.ஏ.வி.எம் சரவணனின் மறைவு தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு காலத்தின் முடிவாக பலராலும் கருதப்படுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றம், புதிய முறைகள், தொழில் நுட்ப ஒழுக்கம் ஆகியவற்றை சினிமாவிற்கு கொண்டு வந்த குடும்பத்தின் முக்கிய தூணாக அவர் திகழ்ந்தார். அவரின் இழப்பு சினிமா துறைக்கு ஈடு செய்ய முடியாதது என்றே அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.