fbpx
Others

ஏழைக்கு ஏத்த BSNL திட்டங்கள்….இதோ லிஸ்ட்..

   ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் ப்ரபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தியபோதும் பிஎஸ்என்எல் (BSNL)நிறுவனம்தனதுப்ரீபெய்ட்கட்டணங்களைஉயத்ததவில்லை.அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆகவே தனியார் டெலிகாம் பயனர்கள் தற்போது பிஎஸ்என்எல் சிம் வாங்கத் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் இன்னும் 4ஜி சேவையை வழங்கவில்லை. தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே விரைவில் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை வழங்கும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ரூ.300-க்குள் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்த திட்டங்கள் குறித்து இப்போது சற்று விரிவாகப்பார்ப்போம். எஸ்என்எல் ரூ.228 திட்டம் (bsnl rs 228 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம். அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அரினா கேம்ஸ் (Arena Games) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் கிடைக்கிறது.அதன்படி வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எந்தவொரு ஒடிடி நன்மையும் வழங்கப்படவில்லை. ஜியோ, ஏர்டெல் இதேபோல் திட்டத்தை வைத்துள்ளன. ஆனால் அந்த திட்டங்கள் குறைந்த நன்மைகளைத் தான் வழங்குகின்றன.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 269 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Arena மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல் (Astrotell), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 298 prepaid plan) தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை மட்டும் வழங்குகிறது இந்த அசத்தலானதிட்டம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 299 prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் . மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். பின்பு இதில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளன.

Related Articles

Back to top button
Close
Close