fbpx
Others

எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25.41 கோடி ஒதுக்கீடு

புதுவை எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.25.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதி புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு ஆண்டுதோறும் தொகுதி மேம்பாட்டு நிதியாக தலா ரூ.2 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள 30 பேரும், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் பெறலாம். இந்த நிதியைக்கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில்எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.25.41 கோடி ஒதுக்கீடு சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள். ரூ.25.41 கோடி ஒதுக்கீடு தற்போது புதுவையில் உள்ள 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.25 கோடியே 41 லட்சத்தை ஒதுக்கி உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தலா ரூ.77 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். இந்த நிதியினால் தொகுதிகள்தோறும் சேதமடைந்து கிடக்கும் ஒரு சில சாலைகளுக்கு விடிவு பிறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close