ஊராட்சிகளில் அரங்கேறும் நிதி முறைகேடுகளைதடுக்கமுடியாதா?

மக்கள்கேள்விகளுக்குஎன்னபதில்…? …
தமிழ்நாடு – தேனி மாவட்டத்தில் ரேசன் கடைகளில் கறார் மற்றும் கெடுபிடி காட்டும் மாவட்ட ஆட்சியர் ? ஊராட்சிகளில் அரங்கேறும் நிதி முறைகேடுகளை கண்டு(ம்)காணாமல் மௌனம் சாதித்து வருவது ஏன் ? எதற்காக ??? தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கறார் மற்றும் கெடுபிடி காட்டும் மாவட்ட ஆட்சியர் ஊராட்சிகளில் அரங்கேறும் நிதி முறைகேடுகளை கண்டு(ம்)கொள்ளாமல் மௌனம் சாதித்து வருவது ஏன் ???தேனியில் நிதி முறைகேடுகளை கண்டுகொள்ளாத ஆட்சியரை தொடர்ந்து உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்,தேனி ஊராட்சிகளின் உதவி இயக்குநர்……தேனி மாவட்டத்தை பொருத்தவரை “மக்கள் நலன், மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலன் ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுவார்.” என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வந்து செல்கிறதெனவும்,……மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்களே, ரேஷன் கடைகளுக்கு ஆய்வு என்ற பெயரில் சென்று ஆங்கே மடித்து வைக்கப்பட்டிருக்கும் காலிச் சாக்குகளை உதறி, அதன் மூலம் சிதறி கிடக்கும் அரிசிகளை எடுத்து வருவாய் இழப்பு காட்டி ஊழியர்களை பதற விடும் தாங்கள், ஓர் ஊராட்சியில், தலைவர் புரிந்த ஊழலில் ஒரு பங்கை மட்டும் கட்டி கணக்கை நேர் செய்தால் மட்டும் போதுமா ? குற்றத்திற்கு உரிய தகுந்த தண்டனை அவருக்கு வழங்குவது எப்போது…?
தமிழ்நாடு சமூகநல அமைப்பினர், பத்திரிக்கையாளர்களின் குற்றச்சாட்டு மற்றும் வேதனை.!!!தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம், இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டின் மூலம் நிதியிழப்பு ஏற்பட்டதை மதிப்பிற்குரிய, தேனி மாவட்ட ஆட்சியரான தாங்களே உறுதிப்படுத்தப்பட்ட பின்பும்,தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-விதி 205(11)-ன் படி தாங்கள் பதவிநீக்கம் செய்யாமல் இருந்ததன் விளைவுதான்…… தற்போது 2024 ஜீலை வரை இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி உட்கடை கிராமங்களில் மேற்கொள்ளாத பணிகளுக்கு தனிநபர்களின் பெயரில் பல இலட்சம் ரூபாய் கணக்கு எழுதி நிதி கையாடல் செய்து வரும் படலம் தொடர்ந்து வருகின்றது……!இத்தகைய முறைகேடுகள் சம்பந்தமாக ஊராட்சி மன்ற உறுப்பினர்களான பெ.செல்வக்கொடிராஜ், ஊ.தவமணி, வ.நித்யா,ஆனந்தஜோதி மற்றும் மேலும் இரண்டு உறுப்பினர்கள் மன்ற தீர்மானத்தில் கையொப்பமிடாமலே “எல்லாம் பொய் கணக்குதான் எழுதி வச்சிருக்கோம். அத நீங்க எதுக்கு கேக்குறீங்க, தலைவர் என்ன சொல்கிறாரோ அதைதான் நான் செய்வேன்.” என கூறியுள்ளதாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்..
மேலும், மாவட்ட ஆட்சித் தலைவரான தங்களிடமும், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும், தேனி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்களிடமும்… இந்த நிதி முறைகேடுகள் நடப்பதாக பலமுறை முறையிட்டும், இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை …… !!!ஏன் என்றே புரியவில்லை ?இதே ஊராட்சியில் அரங்கேறிய ஊழலுக்கு எதிராக நாங்கள் போராடி நிரூபிக்கப்பட்ட ஊழலுக்கு முறையான நடவடிக்கை தற்போது வரை எடுக்காததால் எங்கள் பகுதி வார்டுகளுக்கு முறையாக திட்டப்பணிகள் ஒதுக்கீடு செய்யாமல், அடிப்படை வேலைகளைக்கூட செய்யாமல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் புறக்கணித்து வருகின்றார்கள் என ஊழலுக்கு எதிராக போராடிய வார்டு உறுப்பினர்கள் அவர்களது மன வேதனையை நம்மிடம் தெரிவித்தனர்…….! தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் கீழ் உள்ள விதிகளை பின்பற்றி, ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கி இருந்தால் , தொடர்ந்து நிதி முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருக்கும், இதற்கு மாறாக இவர்களின் மீதுசட்ட நடவடிக்கை எடுக்காதது, ஊழலை ஊக்குவிப்பதாகவே எடுத்துக்கொள்கிறார்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள். என்பதற்கு தேனி மாவட்டத்தில் இலட்சுமி நாயக்கன்பட்டி ஊராட்சி போன்ற பல ஊராட்சிகளே சாட்சி !
தேனி மாவட்ட நிர்வாகம் இத்தகைய நிதி முறைகேடுகளை செய்பவர்கள் மீது, மேலும் இது போன்ற ஊழல்களைத்தடுக்க கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சி வாழ் பொது மக்களும் தங்களின் கருத்துகளை தெரிவிக்கின்றார்கள்………..!.பொதுமக்களின் வரிப்பணத்தை விரயமாக்கி, ஊழல் புரியும் ஊராட்சிகள் மீது பாயும் நடவடிக்கைக்களுக்கு நாங்கள் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரி காத்திருப்போம். என்று சமூகநல அமைப்புக்கள் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பினர் , மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்……. இவற்றை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்து இருந்து பார்ப்போம் என்று பொதுமக்கள் பேசுவது நம் காதுபட கேட்கின்றது!!! …… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி