fbpx
Others

ஊரக வளர்ச்சிபணிகளைநேரில் ஆய்வு செய்தார்நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்.

நீலகிரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.கோத்தகிரி பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு நடுஹட்டி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டபெட்டு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் சவகிடங்கின் மேற்கூரை அமைக்கபட்டதையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டபெட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல் கூடம் கட்டும் பணியையும், 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் ரூ.2 லட்சம் ரூபாய் மதிப்பில் ஓரசோலை ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்தனன், அனிதா, உதவி பொறியாளர்கள் செல்லதுரை, ஜெயந்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close