fbpx
Others

உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள்— செய்தி

உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் சென்னை திருவொற்றியூர் கடற்கரை சாலையில் சிலம்ப விளையாட்டு விழிப்புணர்வு மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.  சங்கத்தின் தலைவர்.சிலம்பக்கலைகாவலர். என் .ஆர். தனபாலன் தலைமை தாங்கினார். பாரம்பரிய சிலம்ப கலை காப்பாளர். பவர். பாண்டியன் முன்னிலை வகித்தார் சங்க செயலாளர் சிலம்பக் கலை முதுமணி .ஆர். முருகக்கனி வரவேற்றார் .
மீனவ தந்தை. வழக்கறிஞர். செல்வராஜ் குமார் பச்சைக்கொடி காட்டி மினி மாரத்தான் சிலம்பாட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.  சென்னை. திருவள்ளூர். செங்கல்பட்டு.. காஞ்சிபுரம் போன்ற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிலம்ப மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ். தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது 5.5 கிலோமீட்டர் தூரம் இந்த மாரத்தான் நடைபெற்றது. இடையில் குடிநீர். எலுமிச்சம் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டது.
மிகச் சிறப்பாக நடந்த இந்த மினி மாரத்தான் நிகழ்ச்சி நிறைவில் தலைவர் என். ஆர்.
தனபாலன் இதில் கலந்து கொண்ட சிலம்ப அமைப்புகளின் ஆசான்களுக்கும். பயிற்சியாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பெருமை சேர்த்தார்.இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த சிலம்ப ஆசான்கள் உதயசூரியன்.விஜயன் .ஆர்.சௌந்தரராஜன் மற்றும் சங்க பொருளாளர்.பி. ராஜவேலு ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார் . சங்க நிர்வாகிகள். எம்.ராஜாஆசான். சவுந்தரராஜன் ஆசான். நாராயணன் ஆசான். கோபால் ஆசான். சிரீதர்ஆசான். மற்றும் ஜெயபால் ஆசான். சத்தீஷ். ரவி ஆசான். துரை ஆசான். சண்முகம் . செந்தில். பரசுராமன் . உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில்   இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்உதயசூரியன் விஜயன் ஆசான் மினி மாரத்தானில் கலந்து கொண்ட மாணவர்கள். மாணவிகள் அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் ஆகியோருக்கும். காவல்துறையினருக்கும். சுகாதாரத்துறை சார்பில் முதலுதவிக்கு 108 ஆம்புலன்ஸ் அனுப்பிய அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் ..

Related Articles

Back to top button
Close
Close