fbpx
Others

 உலக சிலம்பம்ஆசான்கள்/ஆசிரியர்கள்ஒருங்கிணைந்த பொதுக்குழு

 உலக சிலம்பம் ஆசான்கள் மற்றும் சிலம்பம் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள சினி மியூசிக் யூனியன் அரங்கத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என் .ஆர். தனபாலன் தலைமை தாங்கினார்.இணைச் செயலாளர்.
எம் ராஜா ஆசான் . சிலம்ப ஆராய்ச்சி குழு துணைத் தலைவர்கள்
ஜே . கிருஷ்ணசாமி ஆசான் எஸ்.ஜே. அருண் கேசவன் ஆசான் மற்றும் கே.பி. நாராயணன் ஆசான். ஆர். கே. முரளி ஆசான் கோல்டன் கோபால் மாஸ்டர் முன்னிலைவகித்தனர்.கூட்டத்தில்வந்திருந்தஅனைவரையும்துணைத்தலைவர் பவர்எஸ். பாண்டியன் ஆசான் வரவேற்றார்.கூட்டத்தில் தலைவர் என். ஆர்
தனபாலன் பேசும்போது; மத்திய அரசு சிலம்பத்தை கேலோ இந்தியாவில் சேர்த்திருக்கின்றது தமிழ்நாடு அரசு சிலம்பத்தில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித இட ஒதுக்கீடு தரப்படும் என்றும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தரப்படும் என்றும் தமிழக முதல்வர் மு . க. ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் அது மட்டுமல்ல முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் சேர்க்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த பொதுக்குழு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.அத்துடன் தமிழகத்தில் சிலம்ப அமைப்புகள் ஏராளமாக உருவாகிவிட்டது.அவைகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு மூலமாக கிடைக்கின்ற சலுகைகள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய அளவில் ஒரு சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைத்து சிலம்பம் தெரிந்த ஒரு அதிகாரியை நியமித்து ஒரே விதிமுறை என் கீழ் அனைத்து விளையாட்டு வீரர்களும் சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ளும்படி செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக முதல்வர் செய்ய வேண்டும் அவர்களுக்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என்பது மட்டுமல்லாது பாரம்பரிய சிலம்பத்தை மீட்க வேண்டும் சிலம்ப வரலாற்றை பாதுகாக்க வேண்டும் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் சிலம்பு விளையாட்டு சிறந்த முறையில் வளர்ச்சி அடைய தமிழக அரசு உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் எங்கள் சங்கத்தின் மூலமாக தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறுபேசினார் கூட்டத்தில் சென்னை எழும்பூர் ரயில்வே உட்கோட்ட காவல் உதவி ஆணையர் ஆர் ஸ்ரீகாந்த் திரைப்பட நடிகை சாய் தன்ஷிகா நடிகர் பிளாக் பாண்டியன் சிலம்ப சிலம்ப விளையாட்டு தொழில்நுட்ப குழு செயலாளர் எம் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் .விழா ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை சங்க பொருளாளர் வழக்கறிஞர். ராஜவேலு பாண்டியன் செய்திருந்தார்.தூத்துக்குடியில் இருந்து மாலதி மாஸ்டர் தலைமையில் வந்திருந்த சிலம்ப வீராங்கனை மற்றும் வீரர்கள் அடிமுறை விளையாட்டை செய்து காட்டிபாராட்டுபெற்றனர்.முடிவில் சங்கத்தின் செயலாளர்ஆர். முருகக்கனி ஆசான் நன்றி கூறினார்.
.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிலம்பம் ஆசான்கள் மற்றும் சிலம்பம் ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

ஆந்திரா, தெலுங்கானா,பாண்டிச்சேரி மாநிலத்தில் இருந்தும் சிலம்ப ஆசிரியர் வந்திருந்தார்கள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அனைவருக்கும் கருத்துக்கள் பேச வாய்ப்புகள் வழங்கப்பட்டது.அதனடிப்படையில் ஒருமனதாக 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.1. அரசாங்க பள்ளிகளில் தகுதிவாய்ந்த சிலம்ப ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் .அல்லது பகுதி நேர வேலையிலாவது அமர்த்தவேண்டும் தீர்மானம் 2. கேலோ இந்தியா விளையாட்டில் சிலம்ப விளையாட்டு இருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
3 . மூத்த சிலம்ப ஆசான்களுக்கு அரசாங்க விருதுகள் வழங்கப்பட வேண்டும் .
மேலும் ஏழ்மையில் இருக்கும் சிலம்ப ஆசான்களுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும்.4 . அரசாங்கப் பள்ளிகளில் நடைபெறும் சிலம்ப விளையாட்டு போட்டிகள் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற வேண்டும்.5. முதலமைச்சர் கோப்பைக்காக நடத்தப்படுகிற சிலம்ப விளையாட்டு போட்டிகள் வெளிப்படைத் தன்மையோடு நடக்க வேண்டும்
இதனால் அனைத்து தரப்பு சிலம்ப விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பயன்பெறுவார்கள் .6. பாரம்பரிய சிலம்பத்தை மீட்டெடுப்பதும் காப்பாற்றுவது நம்அனைவரதுதார்மீககடமைஎன்றுவலியுறுத்திதீர்மானம்நிறைவேற்றப்பட்டது.முடிவில் சங்கத்தின் செயலாளர்ஆர். முருகக்கனி நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close