உத்தமபாளையம் 1924-2024 நூற்றாண்டு காணும் அரசு மேல்நிலைப் பள்ளி

உத்தமபாளையம் 1924-2024 நூற்றாண்டு காணும் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1990 – 1992 மேல்நிலை அறிவியல் பிரிவு மாணவ மாணவியர்கள் 32 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சந்திப்பு நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது., தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைப்பாஸ் அருகே தனியார் மண்டபத்தில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது
32 ஆண்டுகளுக்கு பின்பு மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்வானது நூற்றுக்கும் மேற்பட்ட அவர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்கள் மற்றும் பாசங்களை பகிர்ந்து கொண்டுவந்தனர்
இந்த நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரின் காலடியில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி சென்று தங்களது வாழ்க்கையில் ஏற்பட்டதையும் படிப்பில் ஏற்பட்டது இன்ப துன்பங்களை மிகவும் சந்தோஷமாக ஒரு நிகழ்வாக இதனை கருத்தில் கொண்டு அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்இதில் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணி ஆங்கில ஆசிரியர் திருநாவுக்கரசு தற்போது உள்ள தலைமை ஆசிரியர் ஜாபர் சித்திக் கலந்து கொண்டனர்இந்நிகழ்வானது பாறை கண்ணன் தலைமையில் ராணி ராமமூர்த்தி தேனி தாலுகா வட்டாட்சியர்.பூமிநாத பாண்டியன் ஸ்டீபன் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் மற்றும் ஜான்சி லீமா ரோஸ் நன்றி உரை நிகழ்த்தினார்,இந்த சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி தங்களது நினைவுளை மென்மேலும் வளர்த்துக் கொண்டனர் .