fbpx
Others

உத்தமபாளையம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்க கோரி நெல் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4000 ஆயிரம் ஏக்கரில் இரண்டு போகம் நெல் விவசாயம் முல்லை பெரியார் பாசன வசதி மூலம் நடைபெற்று வருகின்றன. இந்த முதல் போக நெல் அறுவடை பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் உத்தமபாளையம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அரசு, உரிய ஆய்வு மேற்கொண்டு உடனே உத்தமபாளையம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தை, தேனி எஸ் ஆர் எம் செந்தில்குமார் மற்றும் பார்செஸ் அலுவலர் கண்னன் ஆகியோர் துவக்கி வைத்து உள்ளனர். இதனால் தனியார் நெல் வியாபாரிகளின் நெல் கொள்முதல் குறைந்து உள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நெல் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close