fbpx
Others

உதயநிதி–போலிகள், துரோகிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்

உதயநிதி ஸ்டாலின்
  • சேலம் மாசிநாயக்கன்பட்டி தனியார் பள்ளி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கான கடனுதவி உள்பட ரூபாய் 222 கோடி மதிப்பில் 26,700 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். மேலும் ரூபாய் 200 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் அவர் திறந்து வைத்தார்.பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல லட்சம் கோடி ரூபாய் கடனில் விட்டுச்சென்ற பிற்போக்கான ஆட்சிதான் முந்தய காலத்தில் இருந்ததாகவும், ஆனால் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 70 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1000 மாத உதவித்தொகை என பல்வேறு திட்டங்களால் மக்களும் பெண்களும் பலனடைந்து வருகின்றனர். இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மீதமுள்ள ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியவில்லை. ஆட்சி குறித்து எந்த வித குற்றசாட்டும் சொல்ல முடியாத நிலையில்தான் எதிர்க்கட்சியினர் தங்களுக்குள்ளாகவே அடித்துக்கொள்கின்றனர் என்றும் விமர்சித்தார். தமிழகத்தில் பாசிசம் இல்லாத முற்போக்கு வழியில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே போலிகளையும், துரோகிகளையும் நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்என்றும்அமைச்சர்உதயநிதிஸ்டாலின்தெரிவித்தார்.தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, அமைச்சர் உதயநிதி பணி மேலும் சிறப்பாக இருக்க வேண்டும், சிறப்பாக இருக்கும், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். உங்களை நம்பி நாடும், இயக்கமும் இருக்கிறது. நீங்கள் நினைப்பது போன்று மிகப் பெரிய வெற்றியை சேலம் மாவட்டத்தில் பெற்று தர உழைப்போம் என தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close