fbpx
Others

உதயநிதிஸ்டாலின்–மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

.தாம்பரம் மாநகர இளைஞரணி சார்பில், இளைஞரணி அமைப்பாளர் சத்திய பிரபு ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இலவச மருத்துவ முகாம் பம்மல் பகுதியில் நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைவழங்கினர் .பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.   உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுடன் ஒரு தொகுதிக்கு, 10 ஆயிரம் இளைஞர்களை சேர்த்து விட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி இளைஞரணி நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் அவர் சொன்னதை விட அதிகமானவர்களை சேர்த்து இன்று இந்தியாவில் 50 லட்சம் இளைஞர்களை கொண்ட ஒரே இயக்கம் திமுக தான். எப்படி தலைவர் கழகத்திற்கு பக்கபலமாக இருந்து, இந்த இயக்கத்தை வழி நடத்துகிறாரோ, அதேபோல தலைவருக்கு பக்கபலமாக இருந்து இந்த இயக்கத்தை கட்டுக்கோப்புடன் நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்ற இளம் தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். எனவே, இளைஞர் அணியை சேர்ந்த தம்பிகள் அவர் சொல்லும் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்,’’ என்றார்.

Related Articles

Back to top button
Close
Close