fbpx
Others

உக்ரைனில் இந்தியாவை சேர்ந்த 21ஆயிரம் பேர் தவிப்பதாகவும் தகவல்

தவிப்புவிவரம் சேகரிக்கும் பணி தீவிரம் - மத்திய அரசு உத்தரவிட்டது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுக்கலாம் என்ற நிலை எழுந்ததால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதில் தமிழகத்தை சேர்ந்த 1,000 பேர் தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் பலர் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பதற்காக சென்ற மாணவர்கள் மற்றும் சிலர் வேலைக்காகவும் சென்றவர்கள் ஆவர்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தினருக்கு மாநிலங்களவை எம்.பி.யும், தி.மு.க. அயலக அணியின் இணை செயலாளருமான புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் அனுப்பி உள்ளதோடு மேற்கண்ட தகவல்களையும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து உக்ரைன் சென்றவர்களின் விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்

Related Articles

Back to top button
Close
Close