fbpx
Others

ஈரோடு-திம்பம் மலைப்பாதையில் ஒற்றை யானை நடமாட்டம்..?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதை, இந்த வழியாக தினசரி லாரி,கார் , வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. வனப்பகுதி இடையே மலைப்பாதை அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில் இன்று காலை மலைப்பாதையில் ஒற்றை யானை நடமாடியது. இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் யானையை பாதுகாப்பாக வனப்பகுதியில் அனுப்பி வைத்தனர். யானை நடமாட்டம் இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் எனவனத்துறையினர் அறிவித்து வருகின்றன. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close