ஈரோடு–சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்…

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 22). இவர் தற்போது கோபியில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் பிருந்தா (22). இவர் பி.காம் பட்டதாரி. இவரும், வெங்கடேசனும் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வெங்கடேசனும், பிருந்தாவும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி சத்தியமங்கலம் அருகே புது வடவள்ளியில் உள்ள முருகன் கோவிலில்நண்பர்கள்முன்னிலையில்மாலைமாற்றிதிருமணம்செய்துகொண்டனர்.இதைத்தொடர்ந்து காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து 2பேரின் பெற்றோர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இவர்களின் காதல் திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காதல் ஜோடிகள் அவர்களுடைய நண்பர்களுடன் சென்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்…