ஈரோடு-சத்தியமங்கலம் நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்கசெய்தி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க நிர்வாகி ப்ளூ ஸ்டார் ஏஜென்சி சேஷாத்திரி ஐடிசி நிறுவனத்தின் சிகரெட் விநியோகம் செய்யப்படும் சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் விநியோகஸ்தராக அங்கீகரிக்கப்படாத நபரால் விநியோகம் செய்யப்பட்டு வருவதை/ஜி எஸ் டி இல்லாமல் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து சத்தியமங்கலம் நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் முன்னிலையில் ஒன்று கூடி சங்க உறுப்பினர்களின் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேற்படி சத்தியமங்கல பகுதியில் இயங்கி வரும் அனைத்து வணிகர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் .தலைவர் ஜவஹர் துணைத் தலைவர் நாகராஜ் துணைச் செயலாளர் ராம்குமார் துணைத் தலைவர் ஜாகிர் உசேன் ஆகிய நிர்வாகிகளுடன் சத்தியமங்கலம் விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு. சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திரு.முருகன் நபர் மீதுபுகார் அளிக்கப்பட்டது சத்தியமங்கலம் நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க உறுப்பினரின் பிரச்சனைகளை கையாளும்போது தனது சகோதரனின் பிரச்சனை என நினைத்து என்றென்றும் எங்களின் தோளோடு தோள் கொடுத்து பயணித்து வரும் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க பொறுப்பாளர் அனைவருக்கும். சத்தியமங்கலம் நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.