ஈரான் மீது இன்று அமெரிக்கா தாக்குதல்—பாகிஸ்தான் கண்டிப்பு….
இஸ்லாமாபாத்: இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது இன்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நேற்று பாகிஸ்தான் கூறிய நிலையில் இன்று கண்டித்துள்ளது.இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நேற்றுடன் 9 வது நாளை நிறைவு செய்தது. இன்று 10வது நாளாக போர் தொடங்கியது. இன்றைய போரை தொடங்கியது அமெரிக்கா தான். ஈரானை இதுவரை மிரட்டி வந்த அமெரிக்கா இன்று நேரடியாக தாக்கியது ஈரானில் நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த இடங்களிலும் தான் ஈரான் தனது அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டி வருகிறது. இதனை குறிவைத்து அமெரிக்கா தாக்கி உள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதனால் போரின் தன்மை அதிகரித்துள்ளது. ஈரான் ஒரே நேரத்தில் இஸ்ரேல், அமெரிக்காவை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்துள்ளதுஇதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியறவுத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், “பிராந்தியத்தில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இந்தத் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறுகின்றன. ஐநா சாசனத்தின் கீழ் தன்னைத் தற்காத்துக்கொள்ளஈரானுக்குசட்டப்பூர்வமானஉரிமைஉள்ளது”என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதுமட்டுமின்றி இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக தன்னை அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் பூரித்து கொண்டார். இதுதொடர்பாக நேற்று பாகிஸ்தான் கருத்து தெரிவித்தது. 2026ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்பை பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் லஞ்ச் வழங்கினார். அதன்பிறகு மூடிய அறையில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வேளையில் பாகிஸ்தானில் உள்ள கடற்படை தளம், ராணுவ தளம், விமானப்படை தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்தார்.ஈரானும், பாகிஸ்தானும் அண்டை நாடுகள். இதனால் பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அங்கிருந்து எளிதாக ஈரானை தாக்கலாம் என்று டிரம்ப் நினைக்கிறார். இதனால் தான் அசீம்முனீரிடம்இந்தடிமாண்ட்டைமுன்வைத்தார். அதுமட்டுமின்றி இதற்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்பாகிஸ்தானுக்கு35ரகபோர்விமானங்கள், நிதி உதவி செய்வதாகவும், வர்த்தகம் தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கெள்ளலாம் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதில் பாகிஸ்தான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் தான் ஈரான்மீதானதாக்குதலுக்குஅமெரிக்காவைகண்டித்துள்ளதுபாகிஸ்தான்..