ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி படுகாயம்…
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் 8-ம் தேதி மோஜ்தபா தனது தந்தை அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், 12 நாட்களாக நீடித்து வரும் போரின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், மோஜ்தபா தனது ஒரு காலை இழந்ததோடு தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச்செயலர்பீட்ஹெக்செத்தெரிவித்துள்ளார்.ஈரானின்கிழக்குப்பகுதியில்உள்ள மஷாத்நகருக்குஅருகேமோஜ்தபாகாமேனிசென்றுகொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்துப் பேசிய பீட் ஹெக்செத்,”ஈரானின்புதியதலைவரைத்தாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அவர் ஒரு காலை இழந்து உயிருக்குப் போராடி வருகிறார். ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எவ்வளவு பலமான பாதுகாப்பை வழங்கினாலும், எங்களின் துல்லியமான தாக்குதலில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இதுவே சாட்சி”என்றுதெரிவித்துள்ளார்.மோஜ்தபாதற்போதுடெஹ்ரானில்உள்ளசினாபல்கலைக்கழகமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்குப் பலத்த பாதுகாப்புடன் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருவதாகதகவல்கள்வெளியாகியுள்ளன. மோஜ்தபாவின் உடல்நிலை குறித்து ஈரான் இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.