fbpx
Others

இளையராஜாவுக்கு ராஜ்ய சபா எம்பி பதவி விரைவில்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா

முக்தர் அப்பாஸ் நக்வி
  • நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவையில முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்துவந்தார். ஆர்.சி.பி சிங் எஃகுத்துறை அமைச்சராக இருந்துவந்தார். இருவரும் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்தனர். இருவரும் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ள நிலையில், இருவரது பதவிக் காலமும் நாளையுடன் முடிவடைகிறது. இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லையென்பதால் அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமர் மோடி, முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி சிங் இருவரையும் பாராட்டியுள்ளார் என்றும் அதுவே இது அவர்களது கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதையும் உணர்த்தியது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.ஆகஸ்ட் மாதம் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பா.ஜ.க சார்பில் முக்தர் அப்பாஸ் நக்வியை நிறுத்துவதற்காக அவரை அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளதாகவும் செய்திகள்வெளிவருகின்றன. இளையராஜாவுக்கு ராஜ்ய சபா எம்பி பதவி என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.79 வயதாகும் இளையராஜாவை  இந்திய அரசு 2010-ஆண்டுபத்மபூஷன்விருது வழங்கி கவுரவித்தது.

Related Articles

Back to top button
Close
Close