Others
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை –சிறப்பு செய்தி
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
தேதி : 09.11.2025* ❇️ இன்று (09.11.2025) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.❇️இத்தேர்வு காவல்துறை துணைத் தலைவர் *டாக்டர் Z. ஆனி
விஜயா, இ.கா.ப.,* அவர்கள் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி .அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள்* ஆகியோரின் மேற்பார்வையில் மாவட்டத்தின் 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது.❇️மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், *3,967 தேர்வாளர்கள்* தேர்வில் பங்கேற்றனர். மேலும், 423 தேர்வாளர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதும் தெரிவிக்கப்படுகிறது.