இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி..

❇️ கடந்த 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி செப்டம்பர்இன்று (06.09.2025) தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள், இராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணில் காவல் வீரர்களின் உயர்ந்த தியாகத்தை நினைவுகூர்ந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவலர் தின உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
❇️ பின்னர், காவல்துறையின் சிறப்பையும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் துப்பாக்கி கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு பயன்பெற்றனர்.
❇️ இதையொட்டி, காவலர்களின் உடல் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் நோக்கில் வாலிபால், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பணப்பரிசுகளும் நினைவுப் பரிசுகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டன.
❇️ நிகழ்ச்சியின் இறுதியில் காவலர்களுக்காக அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, காவலர் தின விழா சிறப்பாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது.
❇️ இந்நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.இமயவரம்பன் (இராணிப்பேட்டை உட்கோட்டம்) , காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி (தனிப்பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.