fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை 03.06.2025 சிறப்பு செய்தி …

தேதி:- 03.06.2025*வெளி மாநிலத்திலிருந்து சுமார் 100 கிலோ எடையுள்ள ரூபாய். 30 இலட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த 2 எதிரிகள் கைது*❇️ இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.❇️ அதன்படி இராணிப்பேட்டை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார்வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் 30 இலட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு எதிரிகள் 1.சுரேஷ் (எ) தேவன் அலி (வ/29) த/பெ சுரேந்திரன், 2. சுஜின் (வ/22) த/பெ சுனில்குமார் ஆகியோர்களை கைது செய்து, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதியப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.❇️ இதில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்தகாவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.❇️ இராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close