இராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலைய சிறப்பு செய்தி …
இராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த .பலராமன் என்பவர் கடந்த 24.12.2024 தேதி வாகன விபத்தில் இறந்தார். இவர்களின் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு அவருடன் 1993 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழக முழுவதும் உள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூபாய் 6,67,400/- பணத்தை நன்கொடையாக பெற்று (03.05.2025) அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 1993 ஆம் ஆண்டு காவலர்கள்முன்னிலையில்மாவட்டகாவல்கண்காணிப்பாளர்.விவேகானந்தசுக்லா,அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்கள் ஒற்றுமை உணர்வுடன் கருணை உள்ளத்தோடு மேற்படி நிதியை வழங்கிய 1993 ஆம் ஆண்டு காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் 1993 ஆம் ஆண்டு காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
