இராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் மற்றும் மாவட்ட S.P கவனத்திற்கு…
அச்சிடப்படாத பத்திரிகையின் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகை சங்கங்கள் என்ற போர்வையில் வசூல் வேட்டை!ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி பத்திரிகையாளர்களுக்கு துணை போகும் காவல்துறைபோலி பத்திரிகையாளர்கள் விவகாரம், பல ஆண்டுகளாகப் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இவை பெரிதாக காணப்படுகிறது . இதற்குக் காரணம் மாவட்ட நிர்வாகமும் அரசாங்கமும் என்று நடுநிலைமையான பத்திரிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர் காரணம் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை ஒன்றிய அளவில் தின இதழ்கள், பருவ இதழ்கள், தொலைக்காட்சிகள், மின்னணு ஊடகங்கள் என அனைத்து நிறுவனங்களுக்கும்அங்கீகார அடையாள அட்டைகள் (ACCREDITATION CARD) வழங்கப்படுகின்றன. இவை மாநிலங்களுக்கும் பொருந்தும் ஆனால் மாநிலங்கள் தான் இவற்றை தீர்மானிக்கின்றன, தமிழ்நாட்டை தவிர்த்து மற்றமாநிலங்கள் ஒன்றியஅரசின் பத்திரிக்கையாளர் களுக்கு வழங்கும் அட்டைகள் சலுகைகள் வழங்கி பத்திரிக்கையாளர்களை வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்றனதமிழக அரசு பொறுத்தவரை, நாளிதழ்கள் மற்றும் ஓரிரு வார இதழ்கள் தொலைக்காட்சிகளுக்குமட்டுமே அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. பருவ இதழ்கள், மின்னணு ஊடகங்களில் பணிபுரியும் செய்தியாளர் அடையாள அட்டை என்ற வகையில் தனியான ஓர் அடையாள அட்டை வழங்குவது வழக்கம். அந்த அங்கீகார அடையாள அட்டைகளுக்கு அரசு சலுகைகள் எந்தச் சலுகைகளுமே இந்தச் செய்தியாளர் அடையாள அட்டைகளுக்குக் வழங்குவதுகிடையாது. அதனால், அங்கீகார அடையாள அட்டைகளைப் பெறுவதற்குகடும்போட்டியே நிலவுகிறது, ஒவ்வொரு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு துறை அலுவலர் அவர்களை கையில் போட்டுக்கொண்டு வெளியில் வராத பத்திரிகைகள் கூட அரசால் வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கப்படுகின்றன, இந்த இடத்தில்தான் போலி பத்திரிகையாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அதாவது, பல்வேறு பெயர்களில் போலி பத்திரிகை ஆரம்பித்து அட்டைகளைப் பலர் பெற்றுவிடுகிறார்கள் பத்திரிகை அலுவலகங்களில் வழங்கப்படும்அடையாளஅட்டைகளைவிட அரசின் அங்கீகார அட்டைகளுக்குத்தான் மதிப்பு அதிகம். இந்த அட்டையைவைத்து அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களிடம் ‘காரியம்’ சாதிக்க போலி பத்திரிகையாளர்கள் முயல்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வருகிறது.தரங்கெட்ட போலி நிருபர்களால் இன்றுபத்திரிக்கைத்துறை சீரழிந்து வருகிறது இடையே பத்திரிக்கையாளர் என்றால் கேவலமாக பேசும் நிலை காணப்படுகிறது,இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வெளிவராத பத்திரிகைகள் YouTube channel பெயரில் I.D கார்டுகள் வைத்து கொண்டும். பத்திரிகை சங்கங்களில் ID கார்டுகள் வைத்துக் கொண்டும்PRESS என்று கார் டூவீலர்களில் ஸ்டிக்கர் ஒட்டி பந்தாவாக உலா வருகிறார்கள். மேலும் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் சில முன்னணி ஊடக நிறுவனங்களின் பெயர்களை கூறி அரசு அதிகாரிகள் அலுவலகங்கள் தனியார் நிறுவனங்களை அணுகி உங்களுக்கு சாதகமாக செய்தி போடுகிறோம் என்று கூறி பணம் கேட்பதும் இல்லை என்று சொன்னால் உடனே தவறான செய்திகளை pdf வடிவில்தயார் செய்து வாட்ஸ் அப் மூலம் மிரட்டுவது சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் , கட்ட பஞ்சாயத்து கள்ள மார்க்கெட்டில் மதுவிற்பனை, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், கூறப்படுகிறது.நான்காம் தூணாக விளங்கும்இந்த பத்திரிகைத்துறை மென்மேலும் வளர போலிகளையும் போலி நிருபர்களையும் முறையான பதிவு இல்லாத பத்திரிகைகளையும் சில மீடியாக்களையும் உடனடியாக ஆய்வு செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும்இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை இணைந்து இந்த போலிகள் மீது ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் காரணம் இல்லாமல் அடிக்கடி காவல் நிலையங்களுக்குள் நுழைந்து நிருபர்கள் என்ற போர்வையில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

