இராணிப்பேட்டை– கஞ்சா கடத்தல் 6 பேர் கைது..
இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டதில் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 30 கிலோ கஞ்சா கடத்தி வந்த எதிரி குமரேசன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில 120 கிலோ கஞ்சா கடத்தி வந்த குப்தா சரண் சாகு, சுதிர் அல்பேரியா, தேபப்பிரதா தாஸ் ஆகிய எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்தும், ஆற்காடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 60 கிலோ கஞ்சா கடத்தி வந்த ரெலிமஜி, கவுரப் திருப்பிடிகா ஆகிய எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்தும் மொத்தம் 210 கிலோ கஞ்சா மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்து 6 எதிரிகள் கைது செய்யப்பட்டது. இதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
