fbpx
Others

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதா…….?இல்லை என தேர்தல் ஆணையம் பதில்

அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் வேண்டும் என இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையானது தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பழனிசாமி தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது எந்த தடை உத்தரவும் இல்லாத நிலையில் நீங்கள் ஏன் விதிமுறைகளை ஏற்காமல் இருந்தீர்கள்? என நீதிமன்றம் இபிஎஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பியது.   இதனிடையே தேர்தல் ஆணையம் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தது. அதில், தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இபிஎஸ் தரப்பு கோரிக்கைகளை ஏற்கமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. தொடர்ந்து, கட்சி விதிமாற்றங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதை நாங்கள் தடுக்கவில்லை என்ற நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதா? என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்திருக்கிறது.

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகு புதிய வழக்கை தாக்கல் செய்து இடைக்கால உத்தரவு கேட்பது நடைமுறையில் இல்லை என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள், இருவரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளீர்களா என்பது எங்களுக்கு தேவையில்லாதது. இப்போது உள்ள நிலைமைப்படி பார்த்தால் இரு தரப்பினர் வேட்புமனுவும் நிராகரிக்கப்படும். இப்போது இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் கையொப்பமிட தயார் என்று தெரிவித்தனர்.தொடர்ந்து மற்ற வழக்குகளை விசாரித்து முடித்து வைத்துவிட்டு இந்த வழக்கை கடைசியாக விசாரிக்கிறோம். இருதரப்பும் இன்று அடித்துக் கொள்வார்கள்; நாளை சேர்ந்து கொள்வார்கள்; அதை ஏன் தேர்தல் ஆணையம் பார்க்கவேண்டும்? நீதிமன்ற உத்தரவை பார்ப்பதுதான் ஆணையத்தின் வேலை என நீதிபதிகள் தெரிவித்தனர்.  மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து பதிலளிக்க திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close