fbpx
Others

இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு தர கோரிக்கை –அண்ணாமலை

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே  கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என கூறியிருந்தேன். திமுக-வின் அசுர பண பலம், படைபலத்தை எதிர்க்கும் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே கூறினோம். கடந்த 8 நாட்களாக  இதைத்தான் அண்ணன் இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரிடமும் தொலைபேசி வாயிலாக பேசினேன்.தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நேற்றுமுன் தினம் கொடுத்த அபிடவிட் காரணமாக சில குழப்பங்கள் வரத்தான் செய்யும். சின்னம் என்பது பிரச்னைக்கு உரியதாக தான் இருக்கும். அதிமுக போட்டியிட வேண்டும், அதுவும் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நினைத்து பாஜக கடந்த எட்டு நாட்களாக பல விதமான முயற்சிகளை கையில் எடுத்து பேசிக் கொண்டிருந்தோம். கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்சனையில் தலையிட மாட்டோம் என்பது எங்களது உறுதியான நிலைப்பாடு.ஒரு வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோள்.வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு கூட எடப்பாடி பழனிசாமி அவர்கள் என்னை தொடர்பு கொண்டு ஜனவரி 31-ம் தேதி வரை காத்திருக்கிறேன். அதன்பின்னர் வேட்பாளரை அறிவிக்கப்போகிறேன் எனக் கூறி அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் கூட இபிஎஸ் வேட்பாளரை அறிவித்துவிட்டார் எனக் கூறி வேட்பாளரை அறிவித்தார். இந்த நேரத்தில் பாஜக உறுதியான நிலைப்பாடு என்னவென்றால் கூட்டணி கட்சிகளின் உட்கட்சி பிரச்னைகளில் தலையிட மாட்டோம் என உறுதியாக பாஜக உள்ளது. வலுவான, வலிமையான ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என உறுதியாக இருந்தோம்.ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும், அதுதான் எங்களுடைய விருப்பம். அந்த வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்புடன் உழைக்க நாங்கள் தயார்.அந்த வேட்பாளரும் இரட்டை இலை சின்னத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கும். வெற்றி வாய்ப்பு நமக்கு இருக்கு ஆனாலும் சின்னம் என்பது நமக்கு கூடுதல் பலம் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரிடம் கூறினோம். இதையேதான் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து இதை வலியுறுத்தினோம்.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன். கட்சியின் நலனுக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் குறிப்பாக இந்த இடைத்தேர்தல் முக்கியமான தேர்தல் அதற்காக குறிப்பாக இபிஎஸ் அறிவித்த வேட்பாளருக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தோம். அவரும் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக நான் கையெழுத்து போட தயார் என்றார். மேலும் சில நிபந்தனைகளையும் வைத்தார். சிறிது நேரம் வேண்டும் என அவகாசம் கேட்டார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு நேற்று வந்த பின் இரு தரப்பில் இருந்து அறிக்கைகள் வந்தன. எங்களுடைய நிலைப்பாடு என்பது ஒரு வேட்பாளர் குறிப்பாக இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். பாஜக அந்த வேட்பாளரோடு இணைந்து களப்பணியாற்றி அவரது வெற்றிக்கு உறுதியாக பாடுபடுவார்கள் என்று உறுதிமொழியை அண்ணன் இபிஎஸ் -ஓபிஎஸ் இருவரிடமும் கொடுத்துவிட்டு வந்தோம்” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close