fbpx
Others

இபிஎஸ்க்குஓபிஎஸ் சவால்—-தனிக்கட்சி தொடங்கிபாருங்கள்

கடந்த ஜூலை 11ந்தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப்பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்தப்பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என கூறும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தாம் தற்போதும் தொடர்வதாக கூறும் ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளை நியமித்தார். இந்நிலையில் தமது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் கூட்டினார். நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டதை  ரத்து செய்பவர்களை இந்த நாடு மன்னிக்குமா ? எனக் கேள்வி எழுப்பினார்.  எப்போதுமே அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்றும் அவர் தெரிவித்தார்.முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பணம் மட்டும்தான் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம்,  தைரியமிருந்தால் தனிக்கட்சி தொடங்கிப் பாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தார்.பொதுக்குழுவுக்கு தாம்  வரக்கூடாது என்பதற்காக சதித்திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்திருந்தால் அன்றைக்கே அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தாம் வாக்களித்ததாக தெரிவித்தார்.  தமது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் ஆகவிடாமல் தடுத்தது எடப்பாடிபழனிசாமிதான்என்றும்ஓ.பன்னீர்செல்வம்குற்றம்சாட்டினார்.இந்தக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டிராமச்சந்திரன், வைத்திலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஓபிஎஸ் அணி தரப்பில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Articles

Back to top button
Close
Close