இன்று அரியானா, காஷ்மீர் வாக்குகள் எண்ணப்படுகின்றன..
பா.ஜனதா ஆளும் அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீதவாக்குகள் பதிவாகி இருந்தன.இந்ததேர்தலில்பதிவானவாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்குஎண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சியை மக்கள் யாரிடம் அளித்துள்ளார்கள் என்பது இன்றுபிற்பகலுக்குள் தெரிந்து விடும்.ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்தஎதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெற்றுள்ள முதலாவது சட்டசபை தேர்தல்கள் இவை என்பதால் இவற்றின் முடிவுகள் மத்தியில்ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இன்று பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.