fbpx
Others

சில நாளில் சென்னையில் கொசு தொல்லை இருக்காது…?

சென்னை மாநகராட்சிகொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்... அடுத்த 15 நாட்களில் கொசு தொல்லை குறையும்: சென்னை மேயர் பிரியா நம்பிக்கை

பருவ மழைக்காலம் மற்றும் குளிர்காலம் முடிந்தவுடன் சென்னையில் கொசுதொல்லை அதிகரிக்கும். அந்த வகையில் சென்னை மக்களின் தீராத தொல்லையாக மாறி இருக்கிறது கொசுத்தொல்லை. இதனால், நீர்நிலையோரம் வசிப்பவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த வாரத்தில் தினசரி ஆயிரக்கணக்கான புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு கொசுத்தொல்லை தொடர்பாக வந்த நிலையில், கொசு ஒழிப்பு பணியை இரட்டிப்பாக்கி தீவிரப்படுத்தி இருக்கிறது சென்னை மாநகராட்சி.அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த ஒரு வார காலமாக தீவிர கொசு ஒழிப்பு பணி  நடைபெற்று வருகிறது. சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள பக்கிங்ஹாம், ஓட்டேரி, வீராங்கல் ஓடை, அடையாறு மற்றும் கூவம் உள்ளிட்ட கால்வாய்களில் 286.05 கி.மீ நீளமுள்ள நீர் நிலைகளில் 121.87 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 399 மழை நீர் வடிகால்களில் தேங்கி இருந்த நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.சென்னையில் மொத்தம் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள நிலையில் 4,056 தெருக்களில் கொசு மருந்து இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த நான்கு நாட்களில் 14,779 தெருக்களில் கொசு புகை பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும், 1996.99 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்களில் இதுவரை 534.28 கி.மீ நீளத்திற்கு புகைபரப்புதல் மற்றும் 508.45 கி.மீ நீளத்திற்குமருந்துதெளித்தல்மூலம்கொசுஒழிப்புபணிமேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த ஒரு வார காலமாக கொசு ஒழிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த 10 நாட்களுக்குள் பணிகளை முடித்து கொசு தொல்லை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close