இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சி..
இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்துக்களின் எழுச்சி பெருவிழா ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு செய்யாறு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சன்னியாசி மடம் அருகில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜகணபதி சிலையை வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக விநாயகர் சிலையை, ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி கலவை ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று கிளைவ் பஜார் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி ராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர், எம் இளங்கோ தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக ஏகே.திருமுருகன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மலர், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொருளாளர் ஏடி.சுரேஷ், பாஜக மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர், நாவலவன், பாரதிய ஜனதா கட்சி குமரவேல், ராஜி, இந்து மக்கள் கட்சி மகளிர் அணி பொறுப்பாளர்கள், உள்ளிட்ட வார்டு, நகர, கிளை, ஒன்றிய, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
