இந்திய கடற்படையில் இணைந்த 2 ராட்சசன்கள்..! விவரம் கீழே..
இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎஸ்.எஸ் விக்ரமாதித்யா உள்ளிட்ட 150 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று ஐஎன்எஸ் உதயகிரியும், ஐஎன்எஸ் ஹிம்கிரியும் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தாங்கி செல்லும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப அமைப்புகளுடன் ரூ.45,000 கோடி மதிப்பில் இந்த இரு கப்பல்களும் உருவாக்கப்பட்டன. நடப்பு 2025 ஆம் ஆண்டில் மட்டும், உள்நாட்டிலேயே தயாரான ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் வாக்ஷீர், நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான அர்னாலா உள்ளிட்ட கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன.இந்த நிலையில் தான் இன்று ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் நடந்த விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு போர்கப்பல்களையும் இந்திய கடற்படைக்கு அர்ப்பணித்தார். * ஐஎன்எஸ் நீலகிரியை தொடர்ந்து ஐஎன்எஸ் உதயகிரியும், ஐஎன்எஸ் ஹிம்கிரியும் புராஜெக்ட் – 17 ஏ-இன் கீழ் உள்ள நாட்டிலேயே உருவாக்கப்பட்டன. * புராஜெக்ட் 17-ஏ என்பது, பி 17 ஷிவாலிக் வகுப்பை பின்பற்றி உருவாக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாத பல்வேறு அம்சங்களையும், மேம்பட்ட பல ஆயுதங்களையும் கொண்ட அம்சமாகும். * இரு அதி நவீன போர் கப்பல்கள் இந்திய கடற்படையில்இணைக்கப்படுவதுஇதுவேமுதல்முறையாகும்.* ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி கப்பல்களின் நீளம் சுமார் 149 மீட்டர் ஆகும். * இரு கப்பல்களும் சுமார் தலா 6,600 டன் எடை கொண்டதாகும். * இந்த கப்பல்களின் வேகம் சுமார் 28 நாட்ஸ் ஆகும். அதாவது மணிக்கு 58 கிமீ தொலைவு செல்லக் கூடியது ஆகும். * எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் அதி நவீன வசதிகளும் இந்த கப்பல்களில் உள்ளது. * இந்த இரு கப்பல்களில் இருந்து, சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் பராக் -8 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை செலுத்த முடியும். * 76 மிமீ எம் ஆர் துப்பாக்கியும், 30 மற்றும் 12.7 மிமீ அளவுள்ள குளோசிங் வெப்பன் சிஸ்டம் என்றஆயுதஅமைப்புகளும்இந்தகப்பல்களில் உள்ளன.* ரேடாரில் சிக்காத வகையில் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. * ஐஎன்எஸ் உதயகிரி புராஜெக்ட் 17 ஏ-வின் கீழ் உருவாக்கப்பட்ட 2-வது கப்பபலாகும். வார்ஷிப் டிசைன் பீரோ என்ற உள்ளூர் போர்க்கப்பலின் படி உருவாக்கப்பட்ட 100-வது கப்பலாகும். மும்பையில் மசகான் கப்பல் நிறுவனத்தில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டது. * ஐஎன்எஸ் ஹிம்கிரி புராஜெக்ட் 17 ஏ-வின் கீழ் உருவாக்கப்பட்ட 3-வது கப்பபலாகும். கொல்கத்தாவில் கார்டன் கப்பல் நிறுவனத்தில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டது.