fbpx
Others

இந்திய அரசுஎவ்வாறுவிருதுகள்வழங்கி வருகிறது..?

பத்ம விருதுகள் எவ்வாறு வழங்கப்படுகிறது?…. இதற்கு தகுதியானவர்கள் யார் யார்?சுவாரஸ்யமான ஒரு தொகுப்பு…..!!!!

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்குபாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. துறை சார்ந்த பெரிய பங்களிப்புகளுக்கும், தனது குடிமக்களுக்கும் பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி இந்திய அரசுகௌரவிக்கும். இந்த விருதுகளை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத் 1954 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவின் மிக உயரிய விருதாக பாரத ரத்னா விருதுதான் விளங்குகிறது. பத்ம விபூஷன்,பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் தேசத்தின் அடுத்த பெரிய விருதுகளாக திகழ்கின்றன.அரசியல், சமூகம், நிர்வாகம், கலை பண்பாடு, இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம்,சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை, சமூக நலம் என பல துறைகளில் சிறந்த முறையில்பணியாற்றுபவர்களுக்கும், சேவை செய்பவர்களுக்கும் பத்ம விருதுகள் ஆண்டுதோறும்
வழங்கப்படும்.

இந்திய பிரதமரால் ஒவ்வொரு வருடமும் அமைக்கப்படும் பத்ம விருதுகள் கமிட்டி தரும்பரிந்துரைகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த குழுவிற்குஅமைச்சரவை செயலாளர் தலைமை வகிப்பார். உள்துறை செயலாளர், குடியரசுத் தலைவர்
செயலாளர் என நான்கிலிருந்து ஆறு பிரபலங்கள் உறுப்பினர்களாக இருப்பார்.இந்தக் குழுவை தேர்வு செய்கிற பரிந்துரைகள் பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்குஒப்புதலாக அனுப்பப்படும். அவர்கள் பத்ம விருதாளர் பட்டியலை இறுதி செய்வார்கள். இனம்,
தொழில், பதவி, பாகுபாடு எதுவும் இல்லாமல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் பத்மவிருதுகள் வழங்கப்படுகிறது. ஒருவர் தனக்காகவும் விண்ணப்பிக்கலாம் பிறரையும்பரிந்துரைக்கலாம்.

உயிரிழந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்குவது பெரும்பாலும் தவிர்க்கப்படும். அதேசமயம்மிக தகுதி வாய்ந்த நபராக இருந்தால் அவர் உயிரிழந்த ஓராண்டு நிறைவடையாத நிலையில்
அவர்களின் பெயரை பரிந்துரைக்கலாம். பொது நிறுவனங்கள் உட்பட அரசு துறையில் வேலைசெய்பவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகளுக்கு
மட்டும் விருதுகளில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.மிக அரிய தலைசிறந்த சேவைகளுக்காக பத்ம விபூஷன் விருதும், மிக உயரிய வகையில்சேவை செய்தவர்களுக்காக பத்மபூஷன் விருதும், எந்தத் துறையிலும் தலைசிறந்தபணியாற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படும். இந்த விருதுகள் ஒவ்வொருவருடமும் குடியரசு தலைவர்மாளிகையில்நடைபெறுகிறபிரம்மாண்டவிழாவில்வழங்கப்படுகிறது.பத்ம விருதுகள் பெறுபவர்களுக்கு பணபலம் எதுவும் கிடையாது. விதி எண் 18/1 படி இந்தவிருது வாங்குபவர்கள் தங்களுடையபெயருக்குமுன்பும்பின்பும்இந்தவிருதின்அடைமொழியை பயன்படுத்தக் கூடாது. 1954 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும்விருதுகள் வழங்கப்பட்டு வந்தாலும், 1978, 1979 ஆம் ஆண்டுக்கான விருதுகள்அறிவிக்கப்படவும் இல்லை வழங்கப்படவும் இல்லை. 1993 ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம்ஆண்டு வரையிலான ஆண்டுகளிலும் விருதுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

1954 ஆம் ஆண்டு முதல் பத்ம விபூஷன் விருது தத்தேந்திரநாத் போஸ், நந்தலால் போஸ், வி.கே கிருஷ்ணமேனன் உட்பட ஆறு பேருக்கு வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு வரை 314பேருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தியின் முதன்மைச்செயலாளராக இருந்த பி என் அஸ்கர் உட்பட ஐந்து பேர் விருதுகளை திருப்பி அளித்துவிட்டனர். முதல் பத்மபூஷன் விருது பூமி பாபா, சுகுமார் சிங்,அமர்நாத் ஜாப் உட்பட 23பேருக்கு 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.அதில் கே எஸ் கிருஷ்ணன், லட்சுமணசுவாமி முதலியார், சுப்புலட்சுமி ஆகியோ தமிழகத்தை
சேர்ந்தவர்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த விருதுக்கு தகுதியானவர்களைஅனைத்து மாநில யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசுகள், மத்திய அமைச்சர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர் என அனைவருமே பரிந்துரை செய்தனர். பல
கட்ட ஆய்வுகளுக்கு பிறகு அதற்கு தகுதியானவர்களை மத்திய அரசு தேர்வு செய்துவிருதுகளை அறிவிக்கும்.

ஆனால் சமீப ஆண்டுகளாக இதுவரை அடையாளம் காணப்படாத புகழ் வெளிச்சத்திற்கு வராதஅதே நேரம் தங்களுடைய துறையில் சத்தம் இல்லாமல் மிகப் பெரிய சாதனைகளைநிகழ்த்தும் நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது. இந்தவருடமும் தங்களது துறையில் தன்னிகரற்ற சேவைகளை செய்து அடையாளம் காணப்படாதநபர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்.thanks forDailyhunt.

Related Articles

Back to top button
Close
Close