fbpx
Others

இந்தியன் ரெயில்வே–ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம்முடங்கியது.

. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரெயில்வே செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியது: டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன. இந்த இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியதால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிக்கெட் முன் பதிவு செய்வதில் சிக்கல் என ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தொழில்நுட்ப பிரச்சினையை விரைந்து செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close