fbpx
Others

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி—சிறப்பு செய்தி

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுஎன்.ஆர்.டி.கல்வி குழுமத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு தேனி,என்.ஆர்‌டி.கல்வி நிறுவன வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் மற்றும் என்.ஆர்.டி. கல்வி நிறுவனங்களின்தாளாளருமானமரு.என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.ரெட் கிராஸ் கௌரவச் செயலாளர் திரு.சுருளிவேல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.தேனி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் அன்புச் செழியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார்.பிரபல மனநல மருத்துவர் ரூத் மனோரஞ்சன் அவர்கள் மனநலம் மற்றும் தற்கொலைத் தடுப்பு எனும் தலைப்பில் விரிவாக பேசினார். நிகழ்வில் ரெட் கிராஸ் துணை சேர்மன் மகாராஜன், பொருளாளர் முகமது ஷேக் இப்ராஹிம், என்.ஆர்.டி. கல்லூரி முதல்வர் திரு.விஜய், செயல் அலுவலர் திருமதி.ஹேமா, ரெட்கிராஸ் ஆயுள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் சுமார் 600 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஆண்டிபட்டி செய்தியாளர் வேல்முருகன்

 

Related Articles

Back to top button
Close
Close