fbpx
Others

இங்கிலாந்து ராணி எலிசபெத் நேற்று காலமானார்.96 வயது

உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2-வது நபர் என்ற பெருமைக்குறியவர் ராணி 2-ம் எலிசபெத் ஆவார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் அவர் மரணமடைந்தார். ராணி 2-ம் எலிசபெத்தின் இயற்பெயர் எலிசபெத் அலெக்சாண்டிரியா மேரி. 1926 ஏப்ரல் 21-ம் தேதி பிறந்த எலிசபெத் 1952 பிப்ரவரி 6-ம் தேதி இங்கிலாந்து ராணியாக பொறுப்பேற்றார்உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2-வது நபர் ராணி எலிசபெத் - முதல் இடத்தில் யார்...? . இதனை தொடர்ந்து, கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக 2-ம் எலிசபெத் செயல்பட்டு வந்தார். இவர் இங்கிலாந்திற்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் உள்ளார். ராணி 2-ம் எலிசபெத் இங்கிலாந்து பிரதமர் தேர்வில் முக்கிய பங்கு வகித்தார். ஒவ்வொரு முறை இங்கிலாந்திற்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்போது அதில் ராணி 2-ம் எலிசபெத்தின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்தார். பிலிப் – எலிசபெத் தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள் என 4 பேர் உள்ளனர். ராணி 2-ம் எலிசபெத் நேற்று உயிரிழந்ததையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுக்கொண்டார்  1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ல் அரியணை ஏறிய எலிசபெத் 70 ஆண்டுகள் 214 நாட்கள் ராணியாக செயல்பட்டுள்ளார். இவர், 63 ஆண்டுகள் இங்கிலாந்து ராணியாக இருந்த விக்டோரியாவின் சாதனையை முறியடித்து இங்கிலாந்தை நீண்டகாலம் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2-வது நபர் என்ற பெருமையை ராணி 2-ம் எலிசபெத் பெற்றுள்ளார். பிரான்ஸ் மன்னராக செயல்பட்ட 14-ம் லுயிஸ் உலகின் நீண்டகால மன்னராக செயல்பட்டார். 1643 ஆண்டு மே 14-ம் தேதி முதல் 1715 செப்டம்பர் 1-ம் தேதி வரை 14-ம் லுயிஸ் மன்னராக ஆட்சி செய்தார். 72 ஆண்டுகள் 110 நாட்கள் ஆட்சி செய்த 14-ம் லுயிஸ் உலகின் நீண்ட நாட்கள் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இங்கிலாந்தின் புதிய ராஜாவான சார்லஸ்இங்கிலாந்தின் புதிய ராஜாவான சார்லஸ்

Related Articles

Back to top button
Close
Close