தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9:30 மணிக்கு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சராக பதவி ஏற்றபின் மேடையிலேயே முதலமைச்சரின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார்.!முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் .