ஆற்காடு–வழிப்பறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளங்கோவன் கைது….
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி 1.இளங்கோவன் (வ/39) த/பெ தணிகாசலம் என்பவரை ஆற்காடு நகர காவல் ஆய்வாளர்திரு.சாலமன்ராஜா(பொறுப்பு)அவர்கள்தலைமையில் எதிரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால்,இ.கா.ப.,அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் எதிரி இளங்கோவன் (வ/39) த/பெ தணிகாசலம், எண்:-1/28, வேளாளர் தெரு, முப்பதுவெட்டி, ஆற்காடு, ஆற்காடு தாலுக்கா, இராணிப்பேட்டை மாவட்டம். என்பவர் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.