ஆற்காடு மேற்கு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சியில்…நடப்பது என்ன…?

ஓவர் ஆட்டம் போடும் ஓவர் சீ வளர்மதி
மன உளைச்சலில் ஊராட்சி மன்ற தலைவர்
மனம் குமுறும் பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சியில்பூபாலன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருகிறார் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 3,333 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதில் ஆற்காடு ஒன்றியத்திற்கு 452 வீடுகள் ஒதுக்கப்பட்டன இந்த நிலையில் ஜோனல் பிடிஓ செல்வம் ஓவர் சீ வளர்மதி ஆகியோர் ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்று வலு கட்டாயமாக என்னை அழைத்து பேசினர் நானும் திட்ட இயக்குனரை சந்தித்து பேசினேன் திட்ட இயக்குனர் பேசுகையில்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் உங்கள் நந்தியாலம் ஊராட்சியில் பயனாளிகளை தேர்ந்தெடுத்து உடனடியாக வீடு கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அப்பொழுது ஓவர் சீ வளர்மதியிடம் உண்மையாக வீடு இல்லாதவர்களுக்கும், ஒரே குடும்பத்தில் இரண்டு அண்ணன் தம்பி உள்ளவருக்கும் ரொம்ப கெடுபிடி பண்ணாம நியாயமான முறையில் வீடு கட்ட அனுமதி அளிக்க வேண்டுமென அறிவுரை கூறி அனுப்பினார்.எங்கள் பஞ்சாயத்திற்க்குட்பட்ட சுமார் 41 பேருக்கும் மேற்பட்ட பயனாளிகளை தேர்ந்தெடுத்து,ஓவர்சீ வளர்மதி, ஜோனல் பீடிஓ செல்வம் ஆகியோர் வீடு கட்டக்கூடிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர், ஆய்வு செய்த பின்னர் வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகள் காட்டிய இடத்தை சரி செய்து வீடு இருந்தால் வீடுகளை இடித்து அஸ்திபாரம் போட துரிதப்படுத்தினர்.நந்தியாலம் ஏடிசி பகுதியைச் சேர்ந்த உண்மையான பயனாளிகளான ரவிகண்ணையன்,பலராமன்,சதீஷ்,சரண்ராஜ்,இந்திராஅசோகன்,மாங்குப்பத்தைச்சேர்ந்தகல்பனாசாம்பசிவம்,கோபிதட்சிணாமூர்த்தி,ஆகியோர்களை வீடு கட்டுமான பணிக்கு அஸ்திபாரம் போட சொல்லிவிட்டு ஓவர் சீ வளர்மதி உள்நோக்கம் கொண்ட மர்மநபர்கள் யார் பேச்சையையோ? கேட்டுக் கொண்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமல்வீடு கட்டுமான பணிக்கான உத்தரவு நகலையும் வழங்காமல் ஓவர் ஆட்டம் போட்டு வருகிறார் இவர் திமுக கட்சிக்கும் முதலமைச்சர்க்கும் அவ பேரை உண்டாக்குகிறார் என்னையும் அவமானப்படுத்தியுள்ளார்..இவரால் எனக்கு ஊருக்குள் தலை காட்ட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இவர் மீது நடவடிக்கை எடுத்து உண்மையான பயனாளிகளுக்கு வீடு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக கூறினார்..