Others
ஆற்காடு நகர பாமக சார்பில் ஜெ. குரு அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் , மறைந்த மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆற்காடு பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி வன்னியர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது . பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பாமக நகர செயலாளர் கார்த்திகேயன், வன்னியர் சங்க நகர செயலாளர் பிரபாகரன், மாநில பசுமைத் தாயகம் துணைச் செயலாளர் மகேந்திரன் மற்றும் நகர ,ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் , நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.