fbpx
Others

ஆண்டிபட்டி பேரூராட்சி செயல்இழந்துவிட்டதா…? பொதுமக்கள்கவலை…..?

ஆண்டிபட்டி பேரூராட்சியில் கடந்த ஏழு மாதங்களில் 9 பொறுப்பு செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் நிரந்தர செயல் அலுவலர் நியமித்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்ணீர் வடித்து மாரடைத்து அழும் போராட்டத்தில் ஈடுபட்டனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன  பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த ஏழு மாதங்களில் 9 பொறுப்பு செயல் அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதால்
18 வார்டுகளிலும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் சுகாதாரப் பணிகள், குடிநீர் வினியோகம், அலுவலகப் பணிகள் , கட்டிட வரைபட அனுமதி உள்ளிட்ட பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் எந்த ஒரு திட்டமும் செயல்படாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டிஇதற்கு தீர்வு காணும் வகையில் உடனே நிரந்தர செயல் அலுவலரை பணி நியமனம் செய்ய வலியுறுத்திஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டிப்பட்டி நகர் குழு சார்பாக கண்ணீர் வடித்து மாரடித்து அழும் போராட்டம் நடைபெற்றது  இதில் நிரந்தர செயல் அலுவலர் பேரூராட்சிக்கு நியமனம் செய்து மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பேரூராட்சி மூலம் செயல்படும் பணிகளையும் சரி செய்ய வேண்டுமெனவும் இதற்கு தேனி மாவட்ட ஆட்சியரும் பேரூராட்சிகளின் இயக்குனரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது  50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தால் ஆண்டிபட்டி ஏத்த கோவில் சாலையில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close