ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் அவலநிலை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அம்மச்சியாபுரம் ஊரில் உள்ள அவலநிலை !!! சுகாதாரம் என்பது என்ன ??? எங்களுக்கு கழிப்பறையே தேவையில்லை !!! …. கோவில் எதிராக செல்லும் சாலையின் இருபுறமும் திறந்த வெளி கழிப்பிடமாக !!! இந்த நிலை மாறுவது எப்போது ??? தேனி மாவட்டம் – ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அம்மச்சியாபுரத்தில் இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் என்று இந்த பகுதியை சுற்றிலும் சுவரொட்டிகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியும் குறைந்த அளவு மக்கள்தான் கலந்து கொண்டனர்… இதற்கு முன் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் திரு அறிவானந்தம் அவர்கள் இந்த ஊரில் உள்ள ஒவ்வொரு குறைகளையும் பட்டியலிட்டு பேசினார்.குறிப்பாக இன்று உலக தண்ணீர் தினமான இன்று இங்கு வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் சரியான முறையில் கிடைப்பது இல்லை. ஆனால் ஊரின் கிழக்கே இருந்து புதியதாக கட்டப்பட்டுள்ள பாலம் சிதிலமடைந்து குடி நீர் வீணாக இந்த சாலையில் செல்லும் அவலநிலை!!! ஊருக்குள் சுகாதாரம் என்பது துளி கூட கிடையாது…சாலைகளில் இருபுறமும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டிக்கிடக்கும் அவலநிலை !!! போதாத குறைக்கு கழிவுநீர் சாக்கடையில் பல மாதங்கள் தேங்கி தொற்று நோய்களை இலவசமாக வழங்க உள்ள மாபெரும் அவலநிலை !!! போதாத குறைக்கு அரண்மனை புதூர் செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள காளியம்மன் கோயில் எதிராக மயானத்திற்கு செல்லும் சாலையில் மகளிர் கள் சாலை இருபுறமும் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தியும் இந்த பகுதியில் உள்ள தோட்டங்களில்வேலைசெய்யமுடியாமல்சாலையையேகழிப்பிடமாகஆக்கிவருகின்றனர்.. இந்த பகுதியில் கழிப்பறை கட்டப்பட்டு இங்கு தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறைகளை பூட்டிவிட்டு இந்த சாலையை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர் ! இவ்வளவு குறைகளை வைத்து கொண்டு இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் என்று அறிவித்து விட்டு அதிகாரி வராமல் இருந்திருந்தால் இந்தக் கூட்டம் நடைபெறவில்லை!!! மேலும் இங்கு ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களிடம் Rtd DSP அறிவானந்தம் மற்றும் ஊர் மக்கள் ஆவணங்கள், மற்றும் குறைகள் சம்பந்தமாக கேள்விகளை கேட்க, கேட்க திணறி திக்குமுக்காடி விட்டனர். குறிப்பாக இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை… இங்கு குறிப்பிட்டுள்ள குறைகளான தண்ணீர் பிரச்சினை, சாலையில் வழிந்தோடும் தண்ணீர், கழிவுநீர் சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள், கோவில் எதிராக மயானத்திற்கு செல்லும் சாலையில் இருபுறமும் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவது…….. இந்த பகுதியிலுள்ள கழிவறையில் தண்ணீர் பிரச்சினை!!! இவையெல்லாம் தீர்க்கப் படுவது எப்போது ??? இவற்றை எல்லாம் தீர்வு காண போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அம்மச்சியாபுரம் ஊராட்சி மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இனியும் உறங்கிக் கொண்டு இருக்காமல் உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் கோரிக்கை
வைக்கின்றனர்!!!….. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று பொதுமக்கள் பேசுவது நம் காது பட கேட்கிறது ???……..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி