அலமாதி-மாவட்டஅளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது..

செங்குன்றம் அருகே அலமாதியில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் பேரவை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி செங்குன்றம் அருகே உள்ள அலமாதி அரிகரன் மஹாலில் நடைபெற்றது.போட்டிக்கு தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஜே. ஈசன்ஆசான் தலைமை தாங்கினார்.மற்றும் நிர்வாகிகள் கஜேந்திரன், சக்தி பிரகாஷ், சரவணன், ராஜேந்திரன், சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மாவட்ட தலைவர். நந்தகுமார் அனைவரையும் வரவேற்றார் .சிலம்ப போட்டியை தேசிய பா.ஜ.க சிறுபான்மை அணி செயலாளர். வேலூர் இப்ராஹிம் தொடங்கி வைத்தார்.போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு பா.ஜ.க. ஓ. பி. சி. அணி செயலாளர். மற்றும் கே. ஆர். வி. கல்வி அறக்கட்டளை நிறுவனர். கே. ஆர். வெங்கடேசன் வெற்றிகோப்பைகளையும், பதக்கங்களையும், சான்றிதழையும் வழங்கினார்.நிகழ்ச்சியில் அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி. முருகக்கனி ஆசான், மூத்த சிலம்ப ஆசான் ரிஸ்வான் பாஷா, சமூக சேவகர் ரஜினி கண்ணன், நல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். பொன் கோதண்டன் மற்றும் சிலம்ப பேரவை மாநில, மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.