fbpx
Others

அனைத்து கோயில்களுக்கும்,அறங்காவலர் தேர்வில் ஒரே மாதியான விண்ணப்பம்

  அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை பதிவேற்ற செய்ய உத்தரவு அளித்துள்ளனர்.

ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளைக்குகள் பதிவேற்றம் செய்ய அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளனர்.கோயில் அரங்கவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான குழுக்கள் 23 மாவட்டங்களில் நியமனம் செய்யப்படுகிறது என்று அறநிலையத்துறை கூறியுள்ளது. அறங்காவலர் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கும் பணி 34 மாவட்டங்களில் நடைபெற்று வருவதாகவும், அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் நடைமுறையை முடிக்க இன்னும் ஓராண்டு அவகாசம் தேவை என்றும், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் 560 கோயில்களுக்கு தமிழக அரசே அறங்காவலர்களை நியமிக்கும் என்றும் அறநிலையத் துறை தெரிவித்திருந்தது..இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ், இந்து சமயத் திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்திட, பரம்பரை அறங்காவலர்கள் குழு, பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் குழு என்று இரு வழிகளிலான அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தின் கீழான திருக்கோயில்களில், அத்திருக்கோயிலைத் தொடக்கக் காலத்திலிருந்து நிர்வாகம் செய்து வந்த பரம்பரையினர் குடும்பத்தினரிலிருந்து அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அக்குழுவின் வழியாகத் திருக்கோயில் நிர்வாகம் மேலாண்மை செய்யப்படுகிறது.
பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும், பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்படி அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும், மூன்று அறங்காவலர்களுக்குக் குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு அதிகமில்லாமலும் உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close