அருப்புக்கோட்டையில் அமைக்க உள்ள E-3சாலையின் நிலை என்ன.?
தமிழ்நாடு,விருதுநகர்மாவட்டம்,அருப்புக்கோட்டையில் அமைக்க உள்ள E-3 சாலையின் நிலை என்ன?எதற்காக இந்த காலதாமதம் ? இவற்றில் யாருடைய தலையீட்டால் மெத்தனப்போக்கு ??? என்பதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !!! விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை யில்இன்று 24/09/2024 புதிய பஸ் நிலையம் முன்பாக இந்த E – 3 சாலைத் திட்டம் கால தாமதமாவதைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம் நடக்க இருந்ததை சில அரசியல் முக்கிய பிரமுகர்கள் தலையீட்டால், இந்த உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டமாக மாற்றம் செய்தும், நகர் முழுவதும் முழு கடையடைப்பு கள் செய்து அருப்புக்கோட்டை நகராட்சிக்கு தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்…. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் !!!அருப்புக்கோட்டை நகரின் நலம் விரும்பும் பெரியோர்களே! தாய்மார்களே ! இளைய சமுதாயமே!நம் நகரின் வளர்ச்சிக்காக ,பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்று 2000ல் உருவாக்கப்பட்ட E-3 சாலை திட்டம். நகராட்சி நிர்வாகத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நில எடுப்பு பணிகளும் நடைபெற்றது. E-3 சாலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அஜீஸ் நகர், டி.ஆர்.வி.நகர், எஸ்.பி.கே. கல்லூரி சாலை ஆகியவற்றை இணைத்து நான்குவழிச் சாலையோடு இணைக்கக்கூடிய ஒரு சாலை திட்டம். தற்போது நம் நகரின் வளர்ச்சிப் போக்கில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.மதுரையில் இருந்தும், தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்தும் புறப்பட்ட அருப்புக்கோட்டை வழியாக செல்லக்கூடிய எந்த பேருந்துகளும் நகருக்குள் வராமல் காந்தி நகர் பகுதியில் மக்களை இறக்கி விட்டுச்செல்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக நகருக்கு வந்து செல்வது சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காந்தி நகர் பை-பாஸ் சாலையில் இறக்கி விடுகின்றனர். குடும்பத்துடன் வருபவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். E-3 சாலை திட்டம் நிறைவேறினால் இந்த சிரமம் தவிர்க்க முடியும்.அதுமட்டுமல்லாமல் அஜீஸ் நகர், பெரியார் நகர், கலைஞர் நகர், வி.வி.ஆர். நகர் காலனி பகுதியில் உள்ளவர்கள் பேருந்தில் நீண்ட தூரம் வரவேண்டி உள்ளது. வாகனம் வைத்திருப்பவர்கள் வாகனங்களில் தெருக்களின் வழியாக வருவதற்கும் குறுகிய தெருக்களாக உள்ளது.E-3 சாலை உருவானால், இந்த சிரமங்கள் தவிர்க்கப்படும். நகரின் வளர்ச்சி மற்றும் நலன் கருதி E-3 சாலை திட்டத்தை உடனடியாக துவங்கிட வேண்டும். மக்கள் மீது அக்கறை உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் திட்டம். அதில் உள்ள தடைகளை போக்கிட தக்க நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.ஏற்கனவே கடந்த காலங்களில் E-3 சாலை நிறைவேற்றப்படும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. வலியுறுத்திய கட்சிகள் அனைத்தும் நிச்சயம் ஏற்பார்கள் என்று நம்புகிறோம். மக்களின் நலன் காக்க கரம் கோர்ப்போம்… நகராட்சி நிர்வாகத்தையும். அரசையும் வலியுறுத்துவோம் என்று|அனைத்து கட்சிகள், அனைத்து சமூகங்கள், வியாபாரிகள் அருப்புக்கோட்டை நகர் பொதுமக்கள், அருப்புக்கோட்டை நல்லூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் CPI (ML) மாநில ச் செயலாளர் – த.நாகராஜன், செ.ஜெயராமன் – CPI (ML) விருதுநகர் மாவட்ட செயலாளர், மற்றும் மகளிர் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி…………………… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி. 