fbpx
Others

அரியானா வன்முறை-டெல்லி, உ.பி-யில் போலீசார் உஷார்..

அரியானா வன்முறை அண்டை மாநிலங்களுக்கு பரவுதால் டெல்லி, உத்தரபிரதேச போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் குர்கிராம் மாவட்டத்தில் தொடங்கிய புனித நீர் ஊர்வலம் நூஹ் நள்ஹார் மகாதேவ் கோயிலில் முடிவடைவதாக இருந்தது. கேட்லா மோட் பகுதிக்கு ஊர்வலம் சென்றபோது மற்றொரு மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது.  போலீசாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் உட்பட 5 பேர் பலியானார்கள். மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. பொய்யான செய்திகள் பரவாமல் தடுப்பதற்காக இன்று வரை இணையதள சேவை முடக்கப்பட்டது.டெல்லிக்கு மிக அருகில் குர்கிராம் இருப்பதால், வன்முறை மேலும் பரவாமல் இருக்க ெடல்லியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் மேற்கு உத்தரபிரதேசத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தொடர் பதற்றம் நிலவுதால் வடமாநிலங்களில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button
Close
Close