அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு – தேனி மாவட்டம்,சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் !!! தேனி மாவட்டம், சின்னமனூரில் கெஜ்ரிவால் தொடர்ந்து தாக்கப்படுதலை கண்டித்து ஆம் ஆத்மியினரின் கண்டன ஆர்ப்பாட்டம், 02/12/2024 இன்று சின்னமனூர் நேருஜி பேருந்து நிலையம் அருகே, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி தலைமையில், துணை ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை இணைச் செயலாளர் விஜயகுமார், மகளிரணி துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாண்டியம்மாள், நிர்வாகிகள் பாபு, ரஜினி மற்றும் பலர் கலந்துகொண்டனர். கெஜ்ரிவாலைத் தாக்கிய ஜனநாயக விரோத சக்திகள் மீது காவல்துறையைக் தன்னகத்தே வைத்துள்ள ஒன்றிய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மேலும் டெல்லியில் சட்ட ஒழுங்கைக் காக்கத் தவறிய டெல்லி காவல்துறையை வைத்துள்ள ஒன்றிய அரசு உடனடியாக ராஜினாமாசெய்யவேண்டும்என்றுவலியுறுத்திநடைபெற்றஆர்ப்பாட்டநிகழ்வு………………………………..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி