அரசு மருத்துவமனையில் “ஸ்டக்சர்கள்” மூலம் கட்டிடபொருட்கள் …?
:கோவை., மார்ச்., 28 :கோவை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். தற்போது அங்கு கட்டிடங்கள் கட்டும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்கு நடைபெறும் கட்டிட பணிக்காக ஒரு இடத்தில் போடப்பட்டுள்ள செங்கல் மற்றும் கற்களை பெண் தொழிலாளிகள் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டக்சர்கள், சக்கர நாற்காலிகளை கொண்டு எடுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது. அதில் ஸ்டக்சர்கள் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள். இந்த ஸ்டக்சர்கள் நோயாளிகளை ஆஸ்பத்திரியில் ஒரு வார்டில் இருந்து, ஆப்ரேஷன் தியேட்டர், பரிசோதனை கூடம், கட்டு போடும் இடம் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படுபவை. இதில் கட்டிடகல்லை கொண்டு சென்றால் அவை சேதமாகும், நோயாளிகள் படுத்து கொண்டு செல்லும் போது அதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படும். இந்த நிலையில் நவீன மயமாக்கப்பட்டு வரும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஸ்ட்ரக்சர்களை கட்டிட பணிக்கு பயன்படுத்தியது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்