அரசு பஸ் அதிகப்படுத்தி மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்குமா…?
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை ஹைவேவிஸ் பேரூராட்சி உட்பட்ட ஏழுமலை கிராமங்கள் இருந்து வருகிறது இந்த எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்,தற்போது அரசு இரவங்கலார் மற்றும் மகாராஜா மெட்டு வரை சாலை வசதிகள் அமைத்துள்ளது ஆனால் பஸ் போக்குவரத்து இரண்டு முறை மட்டுமே வந்து செல்வதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், இதில் மகாராஜா மெட்டு வரை பேருந்துசெல்வதில்லை இதனால் பெரிதும் பாதிப்பு உள்ளாய் வருகின்றனர்,மேலும் தென்பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள வனத்துறையினறால் அமைக்கப்பட்டு உள்ள செக் போஸ்டில் காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேகமலைமற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லவோ அல்லது கீழே இறங்குவோ அனுமதிக்க படுகின்றன, இதனால் இங்கு வாழும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர சூழ்நிலைகளுக்கு சின்னமனூர் வரவோஅல்லது மலைக்கிராமங்களுக்கு செல்லவோ முடியவில்லை, எனவே உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு பெற்று அத்தியாவசிய காரணங்களுக்கு எந்த நேரமும் பயணம் செய்யதகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கின்றனர்,மேலும் இப்பகுதி குளிர் பிரதேசமாக இருப்பதாலும் கடின வேலை பார்ப்பவர்கள் அதிகமாக இருப்பதாலும் அரசு டாஸ்மார்க் மதுபான கடையினை விரைந்து திறந்து விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்,