அரசு நிதி வீண்–பேருந்து நிழற்குடையில் சிமெண்டு மூட்டைகள்….?
கோவைமாவட்டம் வால்பாறை அருகே உருளிக்கல் 2வது டிவிஷன் – பேருந்து நிழற்குடையில் சிமெண்டு மூட்டைகள்; பொதுமக்கள் அவதி வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் இரண்டாவது டிவிஷன் சோதனைச்சாவடி அருகில், நகராட்சி ஒப்பந்ததாரர் மூலம் 2025ஆம் ஆண்டு மயானக் கூரை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பணிக்காக கொண்டுவரப்பட்ட சிமெண்டு மூட்டைகளில் 50க்கும் மேற்பட்டவைபயன்படுத்தப்படாமல்பேருந்துநிழற்குடையில்அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
கடந்த சுமார் எட்டு மாதங்களாக அங்கு கிடப்பில் உள்ள இந்தமூட்டைகள் மழை மற்றும் ஈரப்பதத்தால் கறாராகி, கல்லைப் போன்று மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசு நிதி வீணாகியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.மேலும், பேருந்து நிழற்குடை கட்டுமானப் பொருட்களால் நிரம்பி இருப்பதால், பொதுமக்கள் கடும் வெயிலில் வெளியில் நின்றபடி பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.முதியோர், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் அதிக அவதியை சந்தித்து வருகின்றனர்.இந்த நிலைமை குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம்செலுத்தி,மீதமுள்ளபொருட்களை அகற்றி, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு நடவடிக்கைஎடுக்கவேண்டும்எனபொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.கோவைமாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ்.தே