fbpx
Others

அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம்–நிர்வாக குழுதலைவராக ‘இந்து’ என்.ரவி ..

 தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: இதழியல் துறை​யில் ஆர்​வம் உள்ள இளைஞர்​களை ஊக்​குவிக்​கும் நோக்​குட​னும், வளர்ந்து வரும் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப, ஊடக கல்​வியை வழங்​கு​வதற்​காக​வும், இதழியலை தொழிலாக தொடங்க விரும்​பும் தமிழக இளைஞர்​களுக்கு குறைந்த கட்​ட​ணத்​தில் முது​நிலை பட்டய படிப்பை வழங்​கு​வதற்​காக​வும் தமிழக அரசு சார்​பில் ‘சென்னை இதழியல் நிறு​வனம்’ தொடங்க முதல்​வர் ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.இதன்​படி, சென்​னை​யில் 2025-26-ம் கல்வி ஆண்டு முதல் சென்னை இதழியல் கல்வி நிறு​வனம் தொடங்​கப்​படும். இதற்​காக, ரூ.7.75 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. நிறு​வனங்​கள் சட்​டத்​தின்​கீழ் சென்னை இதழியல் நிறு​வனம் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த நிறு​வனத்​தில் இதழியல் முது​நிலை பட்டய படிப்பை நடப்பு (2025- 26) கல்வி ஆண்டு முதல் தொடங்க அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது.இக்​கல்வி நிறு​வனத்​தின் நிர்​வாகக் குழு தலை​வ​ராக நியமிக்​கப்​பட்டுள்ள ‘தி இந்​து’ குழு​ம இயக்​குநரும் ‘தி இந்து’ நாளிதழின் முன்​னாள் முதன்மை ஆசிரியரு​மான என்​.ரவிக்​கும் தலைமை இயக்​குந​ராக நியமிக்​கப்​பட்டுள்ள மூத்த பத்திரி​கையாளர் ஏ.எஸ்​. பன்​னீர் செல்வத்​துக்​கும் அமைச்​சர் மு.பெ.சாமிநாதன் நியமன ஆணை​களை வழங்​கி​னார்.இதில் துறை செயலர் வே.ராஜா​ராமன், செய்தி மக்​கள் தொடர்பு துறை இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன் மற்​றும் அலு​வலர்​கள் பங்​கேற்​றனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Related Articles

Back to top button
Close
Close